Kadalai Maavu Beauty Tips in Tamil

வெயிலினால் உங்களது சருமம் பொலிவிழந்து காணப்படுகிறதா? மேலும் கரும்புள்ளிகள் தோன்றி சருமம் வறட்சியாகக் காட்சியளிக்கிறதா? கவலையை விடுங்கள்.. வீட்டிலிருக்கும் ஒரே ஒரு மூலப்பொருள் கொண்டு பொலிவிழந்த முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம்.

கடலை மாவு இருக்க கவலையேன்.. 😉 உங்களுக்காவே கடலை மாவை உபயோகப்படுத்தி செய்யும் அழகு குறிப்புகள்..

Gram-flour-and-Turmericகடலைமாவு + மஞ்சள்
2tsp கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும். இந்த கலவை குளிர்ச்சியைத் தருவதோடு உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை.

கடலைமாவு + தயிர்
2tsp கடலை மாவில் சிறிதளவு தயிர் விட்டு கெட்டியாக கலந்து முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் நல்ல பயன் இருக்கும். குளிக்கும் போதும் இந்த கலவையைப் பயன்படுத்தினால் சருமம் வழுவழுப்பாகும்.

Curd-and-Gram-Flour-Face-Packகடலைமாவு + பால் + பன்னீர்
2tsp கடலைமாவுடன், பால், ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் மென்மையாகும்.

கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய
கடலை மாவு, கசகசா, பாதாம், துளசி​ இலை​, ரோஜா ​இதழ் ​இந்த பொருள்களை நன்றாக ​சுத்தம் செய்து ​காய வைத்து பவுடராக்கி, பாலுடன் சேர்த்து ​தினமும் முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய் விடும்.​ வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.​

Glowing-faceபருக்கள் நீங்க.. ​
​கடலை மாவில் சிறிது மிளகு, ​​முல்தானி மட்டி சேர்த்து பாலில் கலந்து ஊற வைத்து, ​ முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் நீரில் கழுவினால் பருக்கள் சிறிது சிறிதாக மறைந்து போகும்.

முகம் பொலிவு பெற.. ​
தோலுடன் இருக்கும் கடலை பருப்பு, துளசி ​​இலை, வேப்பங்கொழுந்து ​ ​இலை இவற்றை நிழலில் ​காய வைத்து, அரைத்து கொள்ள வேண்டும்.
பின் இந்த பவுடரை எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பூசி ​உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவாக காணப்படும்.

கருமை மறைய ​
தேங்காய் பா​லில் கடலை மா​வை கலந்து முகத்தில் பூ​சி உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

இங்கு சொல்லப்பட்ட குறிப்புகளில் உங்களுக்கு எளிதான ஒன்றை வாரம் ​இருமுறை செய்து வந்தால், பளபளவென்று ​உங்கள் சருமம் பிரகாசிக்கும்.