கருவளையங்கள் மறைய – Under-Eye Remedies in Tamil
சிலருக்கு குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் கருவளையம் வரும். ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க வந்தால் கருவளையங்கள் வராமல் தடுக்க முடியும்..
வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு கண் கருவளையங்கள் மறைய செய்ய சில குறிப்புகள்..
- உருளைகிழங்கைத் தோல் சீவி நன்றாக அரைத்து, அந்த விழுதை கண்களைச் சுற்றி பத்து போல் வாரம் இரு முறை போட்டு வந்தால் கருவளையம் மறையும்..
- வெள்ளரிச்சாறு தடவி ஊறவைத்து கழுவி வந்தால் நல்லது..
- பாதாம் எண்ணெயை இரவு தூங்கச் செல்லும் முன் கண்களைச் சுற்றி தடவி வந்தால் குணமாகும்..
- ஆரஞ்சு சாறை freezerல் வைத்து ஐஸ் கட்டியாக்கி, அதனை காட்டன் துணியில் கட்டி கண் மேல் ஒத்தி எடுத்து வந்தால் கருவளையம் மறைவதோடு கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
- தக்காளி சாறு + எலுமிச்சை சாறு கலந்து, கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையம் மறையும்.
- நேந்திரம் பழத்தை கூழாக்கி அதை கண்களை சுற்றி பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் மறையும்.
- அடிக்கடி பஞ்சு துண்டுகளை பன்னீரில் நனைத்து கண்களின் மேல் தடவி வந்தால் குணமாகும்.
- எலுமிச்சம் சாற்றையும் பயன்படுத்தி வந்தால் கருவளையம் மறையும். முழங்கை, முழங்கால்களில் தோன்றும் கருமையை போக்கவும் எலுமிச்சை சாற்றை உபயோகிக்கலாம். தக்காளிச் சாற்றையும் உபயோகிக்கலாம்.
- வைட்டமின் ‘இ’ எண்ணெயை கண்களை சுற்றி மசாஜ் செய்யவும். இதை தினசரி படுக்குமுன் செய்து வந்தால் நல்லது.
நன்றாக 7 மணிநேரம் தூங்குங்கள்..தியானம், யோகா பயில்வது பலனளிக்கும்.
Related Articles...