சிந்தி கொக்கி

சிந்தி கொக்கி

சிந்தி கொக்கி - Sindhi Koki

சிந்தி கொக்கி – Sindhi Koki

தேவையானவை :

  • கோதுமை மாவு – 1 கப்
  • பெரிய வெங்காயம் – 2
  • கொத்தமல்லி தழை – 1/4 கப்
  • நெய் – 1/4 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • பச்சை மிளகாய் – 3

செய்முறை :

  1. வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  2. பச்சை மிளகாயை, மிக்சியில் அரைத்துக் கொள்ளலாம். (வாயில் அகப்படாமல் இருக்க)
  3. நெய்யை உருக்கிக் கொள்ளவும்.
  4. இப்போது, கோதுமை மாவை, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில், அரிந்த வெங்காயம், கொத்தமல்லித் தழை, அரைத்த பச்சை மிளகாய்,உப்பு, உருக்கிய நெய் இவற்றை சேர்த்து, பிசிறி விட்டு, தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும் (சப்பாத்தி மாவாக).
  5. இதிலிருந்து ஓரளவு பெரிய உருண்டையாக எல்லாவற்றையும் உருட்டிக் கொள்ளவும்.
  6. மூன்று மூன்று உருண்டைகளாக, எடுத்து,சூடான தவாவில் போட்டு, திருப்பி எடுத்து விட்டு (1 நிமிடமே), தனியாக வைத்துக் கொள்ளவும்.
  7. இப்போது, ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து, சப்பாத்தியாக திரட்டிக் கொள்ளவும். இது சரியான உருண்டையாக வராது. மாவு தொட்டுக் கொள்ள வேண்டாம்.
  8. நான், இதைத் திரட்டாமல், தவாவை, சிறிய flame இல் வைத்து விட்டு, அதிலேயே இந்த வேக வைத்த உருண்டையைப் போட்டு, கையாலேயே தட்டிப் பெரிதாக்கி விட்டேன்.
  9. ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்தும், இதைத் தட்டி, தவாவில் போடலாம்.
  10. அடுப்பை சிம்மிலேயே வைக்கவும்.
  11. எண்ணை விட வேண்டாம். (அதிலேயே நெய் இருக்கிறது).
  12. ஒவ்வொரு பக்கமும் 2 நிமிடம் வேக வைக்கவும். கருகாமல், பிரவுன் கலரில் வந்தவுடன் திருப்பி போட்டு, மீண்டும் அதே கலர் வந்த பிறகு எடுத்துப் பரிமாறவும்.
  13. இதற்குத் தொட்டுக் கொள்ள, தயிர், ஊறுகாய், எந்த சைடு டிஷ் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.