இளநரை மறைய – Grey Hair Remedies in Tamil
இளநரை மறைய உங்களுக்காக சில குறிப்புகள் தமிழில்…
- வேம்பாளம் பட்டையை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை மறையும்.
இவ்வகை பட்டை நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
- சம அளவில் நெல்லி, கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை எடுத்துச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்துக் குளித்து வரலாம்.
- கரிசலாங்கண்ணிச் சாறு, கடுக்காய் ஊறிய தண்ணீர் இரண்டையும் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு.
- சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை வெயிலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வாருங்கள்.
- மருதாணி செம்பருத்தி கறிவேப்பிலை மூன்றையும் மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்.
- சிறிது கறிவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரைமுடி மறைவதோடு நீண்டு வளரும்.
Related Articles...