எதிர்மறை சக்திகள் விலக ஸ்ரீ பவானி அஷ்டகம்

எதிர்மறை சக்திகள் விலக ஸ்ரீ பவானி அஷ்டகம்

mantra for negative energy removal

Mantra for Negative Energy Removal

ஒருவரைப் பாதிக்கக் கூடிய சகல எதிர்மறைச் சக்திகளையும் அவர்களை விட்டு விலகியோடச் செய்யும் சக்தி படைத்த மந்திரம் ‘ஸ்ரீ பவானி அஷ்டகம்’ ஆகும். இது ஆதி சங்கர பகவத்பாதர் அருளியது.

இம்மந்திரத்தை ஒரு வெள்ளிக் கிழமை தினதிலோ அல்லது செவ்வாய்க் கிழமையிலோ ஆரம்பித்து காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் நான்கு அல்லது ஆறு முறை பாராயணம் செய்து வந்தால் உங்களை சுற்றியுள்ள சகல எதிர்மறை சக்திகளும் விலகி விடும். இம்மந்திரத்தை உங்களுடைய பிரச்சினைகள் தீரும் வரை பாராயணம் செய்ய வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் அதற்கு பிறகும் தொடர்ந்து இதனைப் பின்பற்றலாம்.

ஸ்ரீ பவானி அஷ்டகம்

‘ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரி ந ப்ர்த்யோ ந பர்த்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

பவாப்தாவபாரே மஹா துக்க பீரு
பபாத ப்ரகாமி ப்ரலோபி ப்ரமத்த
கு சம்ஸார பாச ப்ரபத்த ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

ந ஜாநாமி தானம் ந ச த்யான யோகம்
ந ஜாநாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ர மந்த்ரம்
ந ஜாநாமி பூஜாம் ந ச ந்யாஸ யோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

ந ஜாநாமி புண்யம் ந ஜாநாமி தீர்த்தம்
ந ஜாநாமி முக்திம் லயம் வா கடாசித்
ந ஜாநாமி பக்திம் வ்ரதம் வாபி மாதர்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

கு கர்மி கு ஸங்கி கு புத்தி கு தாஸ
குலாச்சார ஹீன கடாச்சார லீன
கு த்ருஷ்டி கு வாக்ய ப்ரபந்த சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் ஸுரேஷம்
தினேஷம் நிசீ தேஸ்வரம் வா கடாசித்
ந ஜாநாமி சான்யத் ஸதாஹம்
சரண்யே கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

விவாதே விஸாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே ச அனலே பர்வதே ஷத்ரு மத்யே
ஆரண்யே ஷரண்யே ஸதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

அநந்தோ தரித்ரோ ஜரா ரோகா யுக்தோ
மஹா க்ஷீண தீன ஸதா ஜாத்ய வக்த்ர
விபத்து ப்ரவிஷ்ட்ட ப்ரநஷ்ட்ட ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

எங்கும் நிறையிறையருள் பொங்கிப் பரவிப் பழுதறு பவித்ர மங்களங்கள் யாவும் எங்கும் வளரட்டும்.