கஷ்ட, நஷ்டங்களை போக்கும் அனுமன் மந்திரங்கள்
கஷ்ட, நஷ்டங்களை போக்கும் அனுமன் மந்திரங்கள்
‘ஓம் நமோ ஹனுமதே ருத்ர
அவதாராய பர யந்த்ர மந்த்ர
தந்த்ர த்ராதக நாசகாய
ஸ்ரீ ராம தூதாய ஸ்வாஹா’
‘புத்திர் பலம் யஸோ தைர்யம்
நிர்பயத்வமரோகதா அஜாத்யம்
வாக்படுத்வம் ச ஹநுமத்
ஸ்மரணாத் பவேத்’
ஒருவருக்கு கண் திருஷ்டி அல்லது எதிர்மறை சக்திகளால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களைக் களைய உண்டாகும் அனுமன் மீது அமைந்த இரண்டு முக்கியமான மந்திரங்களை தினமும் சொல்லலாம்.
இம்மந்திரத்தை ஒருவரது ஜன்ம நட்சத்திரத் தினத்தன்று காலையில் ஒரு அனுமனின் கோவிலில் ஏதாவது ஒன்றை மட்டும் சொல்லி அனுமனை வணங்கி ஆரம்பிக்க வேண்டும். அதன் பிறகு தினமும் காலையில் வீட்டிலிருந்தே சொல்லி அனுமனை வணங்கலாம். இந்த மந்திரங்களை எப்போதும் 48 அல்லது 108 தடவை சொல்லி வணங்குதல் முக்கிய அம்சமாகும்.
ஒருவரது ஜாதகத்தில் அவர்களின் லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியவை பாதிப்படைந்து அல்லது பலவீனமாக இருந்தால் அவருக்கு மற்றவர்களின் கண் திருஷ்டியால், எதிர்மறை சக்திகளால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை இன்றி மனம் அமைதி இல்லாமல் அலைப்புறும். இதே போல் ஒருவரின் ஜாதகத்தில் 6,8,12 ஆகிய இடங்கள் பலமாக இருந்து, கோச்சார நிலைகள் பாதகமாக இருந்தாலும் அவற்றின் திசா புத்தி காலங்களில்மேற்கண்ட பிரச்சினைகள் உண்டாகும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனைத்தரும் இந்த அன்மன் மந்திரங்கள்.
Related Articles...