சித்திரை திருவிழா

மாசியில் தேனூர் மண்டபத்தில் நடந்த விழா:

மண்டூக மகரிஷிக்கு காட்சி கொடுப்பதற்காக அழகர் கோவிலிலிருந்து பெருமாள் தேனூர் மண்டபத்தில் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சிதரும் சித்திரை திருவிழா ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. அதே போல் மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.

thenur mandapam

 

சைவத்திற்கு தனி விழா. வைணவத்திற்கு தனிவிழா என்ற கொண்டாடப்பட்டு வந்தது. திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி, சைவ, வைணவ ஒற்றுமை திருவிழா ஆக்கி விட்டார். அழகர்கோவிலில் தான் லட்சுமி, பெருமாளைக் கைப்பிடித்தாள். அன்றுமுதல் கல்யாண சுந்தரவல்லி என்னும் பெயர் பெற்றாள் அன்னை. இந்த திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக் கொண்டது. மக்கள் மனதை கொள்ளையிட்டதால் இவர் ‘கள்ளழகர்’ ஆனார்.

பச்சை பட்டுடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி அழகர் ஆற்றில் இறங்குவார். வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியை காண மதுரை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகையில் திரள்வர்.