புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம்

புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம்

நமோ தேவ்யை மஹா தேவ்யை
துர்க்காயை ஸததம் நமஹ
புத்ரஸௌக்யம் தேஹி தேஹி
கர்ப்பரக்ஷாம் குருஷ்வ நஹ

durga mantra for pregnancy

Durga Mantra for getting Child

இந்த மந்திரம் வம்சவிருத்திகர வம்ஸ கவசம் ஆகும். இம்மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் சொல்லி தூய பக்தியுடன் துர்க்கையை வழிபட வேண்டும். வீட்டில் இருக்கும் துர்க்கை படத்தின் முன்பே வழிபடலாம். வாரம் ஒரு முறை அல்லது உங்களால் முடிந்த வரையில் துர்க்கை ஆலயம் சென்று விளக்கேற்றி வழிபடலாம்.

இம்மந்திரத்தின் பொருள், மகாதேவியான துர்க்கையே உனக்கு நமஸ்காரம். புத்திர பாக்கியத்தை எனக்கு அருள்வாய் அம்மா. எனக்கு கர்ப்பரட்சை புரிந்து காப்பாற்றுவாய் அன்னையே.

இத்துதியை குழந்தை வரம் வேண்டுவோர் மனமுருகி துதித்திட தாய் துர்க்காதேவியின் திருவருளால் சந்தான வரம் கிடைக்கும்.