பொங்கல் திருநாள்

பண்டிகை தட்சிணாயனத்தில் முதல் பண்டிகை ஆகும். ஆறு மாதங்கள் சேர்ந்தது ஒரு அயனம். இரண்டு அயனங்கள் சேர்ந்தது ஒரு ஆண்டு.

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் வரை உத்திராயணம். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, மாதங்கள் வரை தட்சிணாயனம்.

pongal festival 4

 

ஆகாயத்தை இரண்டாகப் பிரித்தால் சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்றும் கூறுவதுண்டு. அதில் மகரத்தில் இருந்து கடகம் வரை சந்திரனுடைய பகுதிக்குள் வரும், அவைகள் சந்திராதிக்கத்திற்குரியன. இந்த மாதத்திலிருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது.

தக்ஷணாயணம் (தெற்கு), உத்திராயணம் (வடக்கு) என்பவை. மகர மாதத்திற்குள் உத்திரப் புண்ணியக்காலம் துவங்கக் கூடிய முதல் நாள் தான் தை பொங்கல்.

பொங்கல் பண்டிகை என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம். போகிப் பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள்.