மாசி மகத்தின் மகத்துவம்
பிற தலங்களில் செய்யும் பாவம் காசி தளத்தில் தீரும். காசியில் செய்த பாவல் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.
“வாரணா ஸ்யாம் க்ருதம் பாபம்
கும்ப கோணே விநயஸ் யதி
கும்ப கோணே க்ருதம் பாபம்
கும்ப கோணே விநயஸ் யதி”
காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும். கும்பகோணத்தில் செய்த பாவம் கும்பகோணத்திலேயே நீங்கும்’ என்று சுலோகம் கூறுகிறது.
மாசி மகத்தன்று கடலோர சிவாலயங்களில் உள்ள சுவாமியையும், அம்பாளையும் நன்கு அலங்கரித்து, சிவசக்தி மூர்த்தங்களுடன் பல்லக்கில் இருத்தி கடற்கரையோரம் எழுந்தருளச் செய்வார்கள். அதுபோலவே, பெருமாள் கோவிலில் உள்ள பெருமாளையும், தாயாரையும் அலங்கரித்து, அவர்களுடன் சக்கரத்தாழ்வாரையும் கடற்கரைக்கு எழுந்தருளச் செய்வார்கள். அங்கு சிவனுக்காக அஸ்திர மூர்த்தியையும், பெருமாளுக்காக சக்கரத்தாழ்வாரையும் கடல் நீரைச் செய்வர். இதற்கு தீர்த்தவாரி என்று பெயர். பின் தூப, தீப, ஆராதனை செய்து குளிர்ச்சியான பண்டங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு தந்த பின் ஆலயம் திரும்புவார்கள்.
Related Articles...