ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம்

சொத்து பணம் பற்றிய குடும்ப பிரச்சனைகளை களையும் ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம்

‘ஓம் நமோ பத்மாவதி
பத்ம நேத்ர வஜ்ர வஜ்
ராம் குஷ ப்ரத்யக்ஷம் பவதி’.

குடும்பத்தில் சொத்து மற்றும் பணம் சம்மந்தமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கும் அமைதியின்மைக்கும், மேலும் குடும்ப உறுப்பினர்களிடையே சொத்து சம்மந்தமான தகராறு மற்றும் வாக்குவாதங்களுக்கும் கருத்து வேற்றுமைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாக அமையக் கூடிய ஒரு திருமந்திரம் ஸ்ரீ ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம் ஆகும்.

goddess padmavathi thayar mantra

இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை அன்று, இரவு 9 மணிக்குமேல் பத்மாவதி தாயாரின் திருவுருவப் படத்தின் முன்பு நெய் தீபமேற்றி 108 முறை சொல்லி தாயாரை வணங்க வேண்டும். அன்று முதல் தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு இரவில் இம்மந்திரத்தை சொல்லி தாயாரை வணங்க மேற்சொன்னபடி பணம் சொத்து சம்மந்தமாக குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி அமைதி நிலவும்.

இது ஸாத்வீக தேவதா மந்திரம் ஆதலால், பத்மாவதி தாயாருக்கு பூஜை செய்யும் இந்த 48 நாட்களில் அசைவ உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது. அதே போல், தினமும் மாலை குளித்து முடித்த பிறகே பூஜையில் அமர வேண்டும்.