ஸ்ரீ வைபவ லட்சுமி விரத பூஜை முறை

ஸ்ரீ வைபவ லட்சுமி விரத பூஜை முறை:

வைபவங்களை வழங்கும் வைபவலட்சுமி

Sri Vaibhavalakshmi Viratha Pooja Details

Sri Vaibhavalakshmi

வாழ்வின் பதினாறு பேறுகளோடு அஷ்டலட்சுமிகள் தரும் எட்டு ஐஸ்வரியங்களையும் சேர்த்து, தன்னை வணங்குபவர்களுக்கு அருள்பவள் தான் வைபவலட்சுமி. 

வைபவலட்சுமி விரத பூஜை மகிமையால் பல்லாயிரக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர். வைபவலட்சுமி பூஜைக்கு கடுமையான நியமங்கள் எதுவும் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே முழுமையான பக்தியோடு வைபவ லக்ஷ்மியை மனதார வழிபட்டாலே உங்கள் சங்கடங்களை நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் தருவாள். பூஜை செய்வதற்கு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பக்தியும், நம்பிக்கையும் கொண்டு செய்யும் பூஜை பல மடங்கு பலனைக் கொடுக்குமென்பது சத்தியம், ஸ்ரீமகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீவைபவலக்ஷ்மியைப் பூஜிப்பதால் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். .

மகாலட்சுமி, வைபவலட்சுமியாக வந்த கதையும், அதன் மகிமையும்:

Mahalakshmi - Vaibhavalakshmi

திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த போது அதில் இருந்து செந்தாமரை மலரில் அமர்ந்த வண்ணம் ஸ்ரீமகாலட்சுமி தோன்றினாள். அந்த மகாலட்சுமியை தேவர்களும், ரிஷிகளும் வணங்கி ‘ஸ்ரீசூக்தம்’ என்ற மந்திரத்தை சொல்லி துதித்தார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள் செந்தாமரை மலர்மீது அமர்ந்திருந்த மகாலட்சுமியை நீராட்டின. எட்டு திக்குகளிலும் உள்ள அஷ்ட திக்கஜங்கள் (யானைகள்) தங்கள் துதிக்கையால் நீரை நுகர்ந்து ஸ்ரீமகாலட்சுமிக்கு திருமஞ்சனம் செய்தன. திருப்பாற்கடல் ஆண் உருவம் கொண்டு பஞ்கஜ (தாமரை) மாலையையும், திருவாபரணங்களையும் சமர்ப்பித்தது. 

கந்தவர்கள் பாட, அப்சரஸ்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். லட்சுமிதேவிக்கு நடக்கும் இந்த வைபவத்தைப் பார்த்து மகாவிஷ்ணு மகிழ்ந்து கொண்டிருந்த வேளையில், சூரியனின் மகன் ரேவந்தன் பாற்கடலை கடையும் போது வெளிவந்த ‘உச்சை சிரவஸ்’ என்ற குதிரையின் மேல் ஏறி திருமாலை வழிபட வைகுண்டம் வந்தான். அந்த குதிரையை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி. அப்பொழுது திருமால் மகாலட்சுமியிடம் இவன் யார்? என்று கேட்டார். தேவி இக்குதிரையில் லயித்து இருந்ததால் திருமால் கேள்வியைக் கேட்கவில்லை. பதிலும் அளிக்கவில்லை. திருமால் கோபம் கொண்டு மகாலட்சுமியை “நீ பெண் குதிரையாக பூலோகத்தில் பிறப்பாயாக” என்று சபித்துவிடுகிறார். இதைக் கண்ட ரேவந்தன் தூரத்தில் இருந்தபடி பெருமாளை வணங்கிவிட்டு சென்று விட்டான்.

திருமாலின் சாபத்தின்படி காளிந்தி நதியும், தமஸா நதியும் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீமகாலட்சுமி பெண் குதிரையாக அவதரித்து வாழ்ந்து வந்தாள். சூரியனின் மனைவி உஷாதேவி தன் கணவனின் உக்ரம் (வெட்பம்) தாங்காமல் தன்னுடைய நிழலை (சாயாதேவி) பெண்ணாக்கி விட்டு குதிரை வடிவில் காளிந்தி நதியும், தமஸா நதியும் சந்திக்கும் இடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். பெண் குதிரைவடிவில் இருந்த மகாலட்சுமி உஷா தேவியிடம். “உன் கணவர் உனக்காக தன் உக்ரத்தைக் குறைத்துக் கொண்டு உன்னை வந்து சேருவாராக; உங்களுக்கு அஷ்வினி தேவர்கள் குழந்தைகளாக பிறப்பார்களாக” என்று வரமளித்தாள்.

ஸ்ரீமகாலட்சுமி இல்லாத வைகுண்டம் கலையிழந்து ரம்யமில்லாமல் காட்சியளித்தது. மகாலட்சுமி.தேவி இல்லாத வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவுக்கு மகிழ்ச்சியில்லை. அதனால் மகாவிஷ்ணு ஆண்குதிரை வடிவம் கொண்டு பெண்குதிரை வடிவில் இருக்கும் ஸ்ரீமகாலட்சுமியை வைகுண்டத்திற்கு அழைத்துப் போக வந்தார். அது சமயம் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதே நேரத்தில் யயாதியின் மகன் துர்வசு பிள்ளை வரம் வேண்டி தவம் இருந்தான். மகாவிஷ்ணு அவனுக்கு தங்களிடம் உள்ள குழந்தையைக் கொடுக்கும்படி ஸ்ரீமகாலட்சுமியிடம் கூறினார். ஸ்ரீமகாலட்சுமி அதற்கு சம்மதிக்கவில்லை. 

அப்போது மகாவிஷ்ணு மகாலட்சுமியிடம் “சந்தான வைபவத்தைக் கொடு; இதனால் வைபவலட்சுமி என பூலோகத்தில் உன்னை அனைவரும் பூஜிப்பார்கள். நான் உன்னைத் தேடி வந்தது போல் வைபவலட்சுமியான உன்னை பூஜிக்கும் பெண்கள் தங்கள் கணவனோடு சேர்ந்து மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கை வாழ்வார்கள். உன்னை வணங்குபவர்களுக்கு அவர்களுடைய சாபங்கள், தோஷங்கள் நீங்கும். நான் உன்னோடு கூடியிருந்து பக்தர்கள் வேண்டும் எல்லா வரங்களையும் கொடுப்பேன்” என பல வரங்கள் கொடுக்கிறார். பின்னர் தங்கள் குழந்தையை துர்வஸுக்குக் கொடுத்து ஆசீர்வதிக்கின்றனர்.

அப்போது லக்ஷ்மி, 
மங்களே மங்களதாரே
மாங்கல்ய மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேஹி
மாங்கல்யம் தேஹிமே ஸதா. 

என்ற ஸ்லோகத்தை அருளி, 

“நான் அருளிய இந்த சுலோகத்தை தினமும் திருவிளக்குமுன் அமர்ந்து ஒன்பது முறை சொல்லும் பக்தைகளின் இல்லத்தில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வதோடு, மாங்கல்ய பலம் பெற்று புத்திரப் பேறுகளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்” என்று சொல்லிவிட்டு இருவரும் வைகுண்டம் சென்றார்கள்.

பூஜைக்குரிய பொருட்கள்: 

  • ஸ்ரீவைபவ லட்சுமிபடம் மற்றும் யந்திரம்
  • வெள்ளி, பித்தளை, செம்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினால் செய்த குடம் அல்லது செம்பு – தீர்த்தம்
  • அரிசி
  • தேன்
  • மஞ்சள் பொடி
  • குங்குமம்
  • சந்தனம்
  • வெற்றிலை பாக்கு
  • பழம்
  • புஸ்பம்
  • ஊதுபத்தி
  • கற்பூரம்
  • சாம்பிராணி
  • தேங்காய்
  • தாலிச்சரடு
  • அர்ச்சனை செய்ய குங்குமம், புஸ்பம் அல்லது நாணயங்கள் –
  • ஆசன பலகை
  • நைவேத்தியம் – சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயாசம்.

விரதமகிமை :

இந்தக் கதையை வெள்ளிக்கிழமைதோரும் விளக்கேற்றி வைத்து படித்தால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பூஜை முடிந்தபின் உங்களால் இயன்ற அளவு வைபவ விரத பூஜை புத்தகங்களை வாங்கி அதனுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் குங்குமம், தாலிச் சரடு, ஒரு ரூபாய் நாணயம் வாழைப்பழம் ஆகிய மங்களப் பொருட்களை வைத்து சுமங்கலிகளுக்கு தானம் செய்தால் செல்வம் பெருகும். புத்திரபாக்கியம், தாலி பாக்கியம், உடல் ஆரோக்கியம், உண்டாகும். வழக்குகள் வெற்றியடையும், மனதில் சந்தோசமும், நிம்மதியும் உண்டாகும்.

இந்த பூஜையை குபேர தம்பதிகள் செய்ததால் அவர்களுக்கு சங்கநிதியும், பத்மநிதியும் கிடைத்தன. இந்த பூஜையை வெள்ளிக்கிழமை தொடங்கி 11-வது வெள்ளிக்கிழமை பூர்த்தி செய்வது விசேஷம். இந்த ஸ்ரீவைபவ லட்சுமி பூஜைக்கு கடுமையான நியமங்கள் எதுவும் கிடையாது. தனியாகவோ அல்லது சுமங்கலிகள் (9, 11, 21, 51, 101 எண்ணிக்கையில்) கூடியிருந்தோ பூஜை செய்யலாம்.

  1. இந்த பூஜைக்கு இத்தனை வெள்ளிக்கிழமைகள் தான் என்பது இல்லை. பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேறிய பின்னாலும் கூட நன்றி செலுத்தும் பொருட்டு பூஜையைத் தொடர்ந்து செய்யலாம்.
  2. பக்தர்கள் ஊர்ப்பயணம் மேற்கொள்ளும் போது ஸ்ரீவைபவ லட்சுமியின் படம் அல்லது தங்க நகைகளைக் கொண்டு இருந்த இடத்திலேயே இனிப்பு நைவேத்தியம் (வெல்லம், சர்க்கரை, பழங்கள்) செய்தாலும் பலன் கிடைக்கும்.

ஸ்ரீவைபவ லட்சுமி விரத பூஜை முறை:

Sri Vaibhavalakshmi Vratha Pooja

பூஜையை வெள்ளிக் கிழமை மாலை விளக்கேற்றும் நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும். பூஜை செய்யும் இடம் மிகவும் தூய்மையாகவும், அமைதியாகவும் இருத்தல் அவசியம். பூஜையை ஆரம்பிக்கும் முன் கை, கால்களை சுத்தம் செய்து விட்டு திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

ஒரு மனைப்பலகையை போட்டு கிழக்கு முகமாக உட்கார வேண்டும். ஆசன பலகைக்கு முன் கோலமிட்டு அதன் மேல் அரிசியை சதுரமாக பரப்பி சமமாக நிரவி விட வேண்டும். அரிசியின் மேல் பூர்ண கும்பத்தை வைத்து அதில் ஏலக்காய், கிராம்பு, வாசனை கலச திரவியங்கள், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ இவைகளைச் சேர்த்த தீர்த்தத்தால் நிரப்பி வைக்கவும்.

கலசத்தின் மேல் தட்டு அல்லது கிண்ணம் வைத்து நாணயங்களால் நிரப்ப வேண்டும். கலசத்தின் அருகில் ஸ்ரீ வைபவ லட்சுமி யந்திரத்தையும், ஸ்ரீ வைபவ லட்சுமி படத்தையும் வைக்க வேண்டும். கலசம், யந்திரம் மற்றும் லட்சுமி படத்திற்கு சந்தனம் குங்குமமிட்டு பூக்களால் அலங்கரித்துக் கொள்ளவும்.

கலசத்தின் முன் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு தாம்பூலம் மற்றும் நிவேதனப் பொருட்களை ஒரு தட்டில் நிரப்பி கலசத்தின் முன்பு வைக்க வேண்டும்.

முதலில் விக்னேச்வர பூஜையைச் செய்த பிறகு ஸ்ரீவைபவ லக்ஷ்மீ பூஜை செய்ய வேண்டும். “சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே” என்ற கணபதி மந்திரம் சொல்லி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

மகாலக்ஷ்மி அருளிய

“மங்களே மங்களதாரே
மாங்கல்ய மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேஹி
மாங்கல்யம் தேஹிமே ஸதா.”

என்ற மந்திரத்தையும், “ஸ்ரீசூக்தம்” மற்றும் லக்ஷ்மி ஸ்தோத்ரம் சொல்லி ஸ்ரீ வைபவ லக்ஷ்மியை வழிபடலாம்.

கலசத்திலுள்ள நீரை பூஜை செய்தவர் சிறிதளவு உட்கொண்டு தன் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். மீதியுள்ள தீர்த்தத்தை தன்மீதும், வீடு முழுவதும் தெளித்தும், வந்தவர்களுக்கும் தீர்த்தமாக கொடுக்கலாம். மீதமுள்ளதை துளசிச் செடியில் ஊற்ற வேண்டும். கலசத்தின் கீழ் உள்ள அரிசியை அரிசிப் பானையில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

விரதத்தை பூர்த்தி செய்கின்ற அன்று சர்க்கரைப் பொங்கல் நைவேத்திய பிரசாதமும் கொடுக்க வேண்டும். பூஜையில் வைத்துள்ள நாணயத்தை பத்திரப்படுத்தி ஒவ்வொரு பூஜைக்கும் உபயோகப்படுத்தவும். அந்த நாணயங்களை செலவு செய்யக்கூடாது.

ஸ்ரீ வைபவ லட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கும், அதில் கலந்து கொள்பவர்களுக்கும் செல்வம் பெருகும், அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகும். மாங்கல்ய பாக்கியம் பாக்கியம் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும்.

ஸ்ரீ சூக்தம்

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண-ரஜ-தஸ்ரஜாம் சந்த்ராம்
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மநப-காமிநீம் யஸ்யாம்
ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷானஹம்

அஸ்வபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத
ப்ரபோதிநீம் ஸ்ரியம் தேவீ- முபஹ்வயே
ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்

காம் ஸோ ஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா
மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோப
ஹ்வயே ஸ்ரியம்

சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே
தேஜுஷ்டா-முதாராம் தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே
லக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே

ஆதித்ய-வர்ணே தபஸோ திஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ரு÷க்ஷõத
பில்வ: தஸ்ய பலானி தபஸா நுதந்து மாயாந்தராயாஸ்ச பாஹ்யா
அலக்ஷ்மீ:

உபைது மாம் தேவஸக: கீர்த்திஸ்ச மணினா ஸஹ ப்ராதுர் பூதோ
ஸ்மி ராஷ்ட்ரே-ஸ்மின் கீர்த்திம்ருத்திம் ததாது மே

க்ஷúத்-பிபாஸா மலாம் ஜ்யோஷ்டா-மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம்
அபூதி-மஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத்

கந்த-த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஸ்வரீ
ஸர்வ-பூதானாம் தாமி-ஹோபஹ்வயே ஸ்ரியம்

மனஸ: காம-மாகூதிம் வாச: ஸத்யமஸீமஹி பஸூனாம் ரூப
மன்னஸ்ய மயி ஸ்ரீ: ஸ்ரயதாம் யஸ:

கர்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம ஸ்ரியம் வாஸய மே
குலே மாதரம் பத்ம-மாலிநீம்

ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே
நி-சதேவீம் மாதர ஸ்ரியம் வாஸய மே-குலே

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்கலாம் பத்மமாலினீம் சந்த்ராம்
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மனபகாமினீம் யஸ்யாம்
ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-ஸ்வாம் விந்தேயம்
புருஷானஹம்

ய: ஸுசி: ப்ரயதோ பூத்வா ஜுஹுயா-தாஜ்ய-மன்வஹம்
ஸூக்தம் பஞ்சதஸர்சம் ச ஸ்ரீ காம: ஸததம் ஜபேத்

பத்மாநனே பத்ம ஊரூ பத்மாக்ஷீ பத்ம – ஸம்பவே தன்மே
பஜஸி பத்மாக்ஷீ யேந ஸெளக்யம் லபாம்யஹம்

அஸ்வதாயீ கோதாயீ தனதாயீ மஹாதனே தனம்-மே
ஜுஷதாம்-தேவி ஸர்வ காமாம்ஸ்ச தேஹி மே

பத்மாநனே பத்ம-விபத்ம-பத்ரே பத்ம-ப்ரியே பத்ம-தலாயதாக்ஷி
விஸ்வ-ப்ரியே விஸ்வ மனோ-நுகூலே த்வத்பாத – பத்மம் மயி
ஸந்நிதத்ஸ்வ

புத்ர-பௌத்ர-தனம் தான்யம் ஹஸ்த்-யஸ்வாதிகவே-ரதம்
ப்ரஜானாம் பவஸீ மாதா ஆயுஷ்மந்தம் கரோது மே

தன-மக்நிர்-தனம் வாயும்-தனம் ஸூர்யோ-தனம் வஸு: தனம்
இந்த்ரோ ப்ருஹஸ்பதிர்-வருணம் தனமஸ்து தே

வைநதேய ஸோமம் பிப ஸோமம் பிபது வ்ருத்ரஹா ஸோமம்
தனஸ்ய ஸோமினோ மஹ்யம் ததாது ஸோமிந:

ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நாஸுபா மதி:
பவந்தி க்ருத-புண்யானாம் பக்தானாம் ஸ்ரீஸுக்தம் ஜபேத்:

ஸரஸிஜ-நிலயே ஸரோஜ-ஹஸ்தே தவலதராம்ஸுக-கந்தமால்ய-
ஸோபே பகவதி-ஹரிவல்லபே மனோஜ்ஞே த்ரிபுவன-பூதிகரி
ப்ரஸீத மஹ்யம்

விஷ்ணு-பத்நீம் க்ஷமாம் தேவீம் மாதவீம் மாதவ-ப்ரியாம்
லக்ஷ்மீம் ப்ரிய-ஸகீம் தேவீம் நமாம்யச்யுத-வல்லபாம்

மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு-பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாம்

மஹாதேவ்யை ச வித்மஹே ருத்ர-பத்ன்யை ச தீமஹி
தந்நோ கௌரீ ப்ரசோதயாத்

ஸ்ரீர்-வர்சஸ்வ-மாயுஷ்ய-மாரோக்ய-மாவிதாச்-சே
õபமாநாம்- மஹீயதே தான்யம் தனம் பஸும்
பஹுபுத்ர-லாபம் ஸத-ஸம்வத்ஸரம் தீர்கமாயு:

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

Click Here to Download Sri Vaibhavalakshmi Viratha Pooja Details in Tamil PDF