Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Database has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 83

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Datastore has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 1478

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Input_Cleaner has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 1819

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Registry has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 3138

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Session has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 3526

Warning: Use of undefined constant DIR - assumed 'DIR' (this will throw an Error in a future version of PHP) in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 5753

Warning: Use of undefined constant DIR - assumed 'DIR' (this will throw an Error in a future version of PHP) in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 5754

Warning: Function get_magic_quotes_gpc() is deprecated in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 1960
சிந்தனை பேழை


சிந்தனை பேழை

123
  1. balamade4u
    balamade4u
    நட்பு நிறை நல்லன்பு நெஞ்சங்களே!!
    இந்த சிந்தனை பேழையில் தங்கள் சிந்தனை வரிகளை வைரங்களாய்,
    தங்களைக் கவர்ந்த சான்றோர்கள் சிந்திய மணிகளை முத்துக்களாய் குவியுங்கள்!!
    பொன்னும் மணியும் நவரத்தினங்களும் இப் பேழையில் நிறையட்டும்!!

    எட்டுத் திக்கும் கண்டெடுத்த எழில் மணிகளை,
    கலைச் செல்வங்களை கொணர்ந்திங்கு சேர்ப்போம்!!
    வாருங்கள்!! வாருங்கள்!!!
    பொன்னும், மணியும், இனி நம்
    பொது உடமை ஆகட்டும்!!

    சிந்தனை பேழையை திறக்கலாமா என் சீரிய நட்பே...?
    தங்கள் ஆசைகளுடனும் ஆசிகளுடனும்...
    இதோ சிந்தனை பேழை...
    தி..றக்..கி..றது!!
  2. balamade4u
    balamade4u
    கடவுளிடம் ஒருவன் கேட்டான்:

    இறைவா...
    விதி என்று நீ முன்பே எழுதியபடி தான் எல்லாம் நடக்குமென்றால்...
    நான் எதற்க்காக உன்னை நினைக்க வேண்டும்?
    வணங்கவேண்டும்?
    நீ தான் எல்லாமே முன்பே எழுதி வைத்து விட்டாயே..!

    இறைவன் சிரித்தபடி சொன்னான்:

    குழந்தாய்! நீ சொன்னது சரி தான்!
    எல்லாமே முன்பே எழுதி விட்டேன்...
    ஆனால்...
    நிறைய இடங்களில் நான் எழுதியது...
    "உன் எண்ணம் போலவே நடக்கட்டும்" என்று தான்!!
  3. balamade4u
    balamade4u
    எல்லா பூட்டுக்களுக்கும் சாவிகள் உள்ளதைப்போல
    நம் எல்லா துயரங்களுக்கும் "தீர்வுகள்" உண்டு..
    ஆனால் நமது உண்மை நிலை என்னவென்றால்..
    பூட்டுக்களும் சாவிகளும் கலைந்து கிடப்பது தான்!!

    ஆனாலும்..
    தேடினால்... இங்கு எல்லா பூட்டுக்களுக்கும்
    சாவிகள் கிடைக்கும்!!
  4. balamade4u
    balamade4u
    மருத்துவ அறிவு சொல்கிறது:
    நாவில் ஏற்படும் "புண்" விரைவில் ஆறக் கூடியது என்று!

    அனுபவ அறிவு சொல்கிறது:
    நாவால் ஏற்படும் "புண்"ணே விரைவில் ஆறாதது என்று!
  5. balamade4u
    balamade4u
    அழகானவை எல்லாம் நம் அன்பைப் பெறுவதில்லை...
    ஆனால்...
    நம் அன்பைப் பெற்ற எல்லாம் "அழகானவை"தான்
  6. balamade4u
    balamade4u
    ஒரு கல்லறையில் எழுதியிருந்த வாசகம்:

    இந்த இடம்...

    "தான் இல்லாவிட்டால் இந்த உலகம் சுழலாது!
    என்று ஒரு காலத்தில் சத்தமிட்டவர்கள்
    அடங்கிய இடம்
    !"
  7. balamade4u
    balamade4u
    நீ எதிர்பாராத சூழல் உன் முன் வந்தால்..
    என்ன பொருள்?


    நீ எதிர்பார்த்ததை விட
    உன் இலக்கை நோக்கி
    நீ வேகமாய்ப் போகிறாய் என்று பொருள்!
  8. balamade4u
    balamade4u
    கை குலுக்க வேண்டிய கரங்களையும்
    கை பிடிக்க வேண்டிய கரங்களையும்
    நீ அறிந்து கொண்டால்...

    வாழ்கை உனக்கு எளிதாகும்! இனிதாகும்!!
  9. Ganga
    Ganga
    மிக அழகான,நிதர்சனமான வரிகள் பாலா சார்
  10. balamade4u
    balamade4u
    கோபத்தின் "விளைவு",
    கோபத்தின் "காரணத்தை" விட
    வலி நிறைந்தது!
  11. balamade4u
    balamade4u
    திருமணமாகாதவர்கள் நினைக்கிறார்கள்-
    திருமணமானவர்கள் "அதிஷ்டசாலிகள்" என்று!

    திருமணமானவர்கள் நினைக்கிறார்கள்-
    திருமணமாகாதவர்கள் "அதிஷ்டசாலிகள்" என்று
    !

    இதில் குறிப்பிடவேண்டிய உண்மை என்னவென்றால்..


    திருமணமானவர்கள் பகலில் நினைக்கிறார்கள்!-
    திருமணமாகாதவர்கள் இரவில் நினைக்கிறார்கள்!!
  12. balamade4u
    balamade4u
    "அழகான வாழ்க்கை" என்பது ஒரு கற்பனை

    ஆனால் "வாழ்க்கை" என்பது
    கற்பனையை விட அழகானது!!

    அதனால்...
    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும்
    ரசித்து கொண்டாடுவோம்!
  13. balamade4u
    balamade4u
    சுவாமி விவேகானந்தரிடம் ஒருவன் கேட்டான்:
    மனிதர்களுக் கிடையே உள்ள "கருத்து வேறுபாடு"களுக்கு
    காரணம் என்ன சுவாமி? என்று!

    விவேகானந்தர் சொன்னார்:
    அதற்க்கு காரணம்,
    நாம் மக்களை "அவர்"களாக பார்ப்பதில்லை!
    "நாம்" ஆக பார்ப்பதே காரணம்!
  14. balamade4u
    balamade4u
    "குஞ்சி அழகும் கொடுந்தானை கோட்டழகும்
    மஞ்சள் அழகும் அழகல்ல, நெஞ்சத்து
    நல்லம்யாம் எனும் நடுவு நிலையான்
    கல்வி அழகே அழகு".

    பொருள்: ஒரு பெண்ணுக்கு கூந்தல் கரு கருவென்று நீண்டு வளர்ந்து அழகாக தோன்றலாம். அவளது அங்கங்கள் திரட்சியாக கவர்ந்து இழுக்கலாம். மஞ்சள் பூச்சால் அவள் மேனி மினு மினுக்கலாம். ஆனால் அவை யாவும் அழகல்ல. ஒரு பெண் கல்வி கற்பதனால், அவள் நெஞ்சத்துள் நல்ல பண்புகள் வளரும். அந்த நல்லொழுக்க நிலை உருவாவதால், ஒரு பெண்ணுக்கு கல்வி அழகே அழகாகும்.

    -நாலடியார்.
  15. balamade4u
    balamade4u
    "என்னுடைய பொருள்கள் என்னுடையது
    உன்னுடைய பொருள்களும் என்னுடையவையே"
    என்கிற மன நிலையில் இருப்பவன் அதமன்.

    "என்னுடைய பொருள்கள் என்னுடையவை
    உன்னுடைய பொருள்கள் உன்னுடையவை"
    என்கிற மனநிலையில் இருப்பவன் மத்திமன்.


    "என்னுடைய பொருள்களும் உன்னுடையவையே"
    என்கிற மனநிலையில் இருப்பவன் உத்தமன்.

    "என்னுடைய பொருள்களும் என்னுடையவை அல்ல
    உன்னுடைய பொருள்களும் உன்னுடையவை அல்ல"
    என்கிற மனநிலையில் இருப்பவன் ஞானி................

    -சொன்னவர் 'கிருபானந்த வாரியார்'.
  16. balamade4u
    balamade4u
    திருமூலர் அருளிய திருமந்திரம்
    (மூன்றாந்தந்திரம்)

    ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
    ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
    ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
    மாறுதல் ஒன்றின் கண் வஞ்சக மாமே.

    விளக்கம்:-

    பூரகம் - உள்ளிழுக்கும் சுவாசம் (inhalation)

    கும்பகம் _ மூச்சுக் காற்றை உள்ளேயே அடக்கி வைத்தல் (holding breath)

    ரேசகம் - மூச்சுக்காற்றை வெளிவிடல் (exalation)

    ஈரெட்டு - 2*8 = 16

    உள்ளே இழுக்கும் மூச்சுக் காற்றை 16 எண்ணிக்கை அளவு மெதுவாக உள்ளே இழுக்கவேண்டும்.

    இழுத்த காற்றை 64 எண்ணிக்கை வரை உள்ளேயே அடக்கி வைக்க வேண்டும்.

    அடக்கி வைத்த காற்றை 32 எண்ணிக்கை அளவு நிதானமாக வெளியில் விட வேண்டும்.

    இந்த எண்ணிக்கையை மாற்றி செய்வது ப்ராணாயாமமே அல்ல.

    இதை மாற்றி செய்தால் அது தவறாகும்.
  17. balamade4u
    balamade4u
    திருமூலரின் திருமந்திரம் (மூன்றாம் தந்திரம்)

    தியானம்.

    நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
    டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
    துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
    பயனிது காயம் பயமில்லை தானே

    விளக்கம்:-

    ஏதாவது ஒரு தியான நிலையில் (பத்மாசனம், ஸ்வஸ்திகாசனம், வஜ்ராசனம்) அமர்ந்து (நயனம் ) கண்கள் இரண்டும் மூக்கின் நுனியைப் பார்க்கும்படி முழு கவனத்தையும் நுனி மூக்கின் மீது வைத்து மூச்சுக் காற்றை நிதானமாக உள்ளிழுத்து சிறிது நேரம் உள்ளேயே வைத்திருந்து பின் மெதுவாக மூச்சை வெளியே விடவேண்டும். சுவாச நிலை ஒரே சீராக அமைய வேண்டும். உடல் விறைப்பாக இல்லாமல் தளர்ந்த நிலையில் இருக்க வேண்டும். நாடிகள் அனைத்தும் ஓய்வு நிலையில் இருக்க வேண்டும். ஆனால் முதுகு தண்டுவடம் மட்டும் நேராக தொய்வில்லாமல் அமர்ந்திருக்க வேண்டும். இவ்வாறு காற்றை உள்ளே அடக்கி , ஓய்வு நிலையில் மனதை அலைய விடாமல் தியானம் செய்பவர்களுக்கு உடல் நலத்தில் ஒரு கெடுதலும் ஏற்படாது.
  18. balamade4u
    balamade4u
    நான் ரசித்தவை

    மரமது மரத்தில் ஏறி
    மரமதை கையில் ஏந்தி
    மரமதை தோளில் சாய்த்து
    மரமதை மரத்தால் குத்தி
    வளமனைக்கு ஏகும்போது
    மரமதை கண்ட மாதர்
    மரமொடு மரம் எடுத்தார்
    !


    (இந்த புற நானூற்று பாடலிலே மரம் என்பது பல்வேறு மரங்களின் பெயரை குறிக்கிறது!

    1.அரச மரம்(அரசர்)
    2.மா மரம்(மா=குதிரை)
    3.ஈட்டி மரம்(ஈட்டியை ஏந்தி)
    4.வேல மரம்('வேல்' தோளில் சாய்த்து)
    5.வேங்கை மரம்(வேங்கை புலியை ஈட்டியால் குத்தி)
    6.அரச மரம்(அரண்மனைக்கு வந்த அரசரைக் கண்ட மாதர்)
    7.ஆல்+அத்தி(ஆல மரம்+அத்தி மரம்)= ஆரத்தி(மங்கள ஆரத்தி எடுத்தனர்
  19. balamade4u
    balamade4u
    சங்கரற்கும் ஆறுதலை, சண்முகற்கும் ஆறுதலை
    ஐந்கரர்க்கு மாறுதலை ஆனதே- சங்கை
    பிடித்தார்க்கும் ஆறுதலை பித்தா! நின் பாதம்
    படித்தார்க்கும் ஆறுதலை பார்!


    இதில் "ஆறுதலை" என்பது கீழ் கண்ட அர்த்தங்களை உடையதாக உள்ளது!

    1.ஆறு, தலையில் கொண்டவர்(சிவன்)
    2.ஆறு தலைகள் கொண்ட முருகன்
    3. ஆறு தலை(மை)யாக கொண்ட இடம் கொண்ட விஷ்ணு
    4. ஆறுதலை அளிக்கும் திரு பாதங்கள்.
  20. shaalam
    shaalam
    முத்து மணி ரத்தினங்களாய் கருத்துக்களை பதித்த சகோதரர் பாலாவுக்கு நன்றிகள். இணையத் தமிழை கற்றுத்தந்ததொரு தளம். அது முதல் தமிழில் பதிக்கும் எல்லா தளங்களிலும் பங்களிக்கிறேன். இது என் முதல் பதிவு இந்த குழுவில். இனியும் வரும். நன்றிகள்.
123
Bookmarks
Like It?
Share It!







Follow Penmai on Twitter